Monday, November 12, 2007

வேண்டாம் பாலியல் கல்வி!வேண்டும் ஒழுக்கக் கல்வி!!

மத்திய அரசாங்கம் வரும் கல்வி ஆண்டு முதல் யூனிசெப் (UNICEF) அமைப்பால் வடிவமைக்கப்பட்ட வளர் இளம் பருவத்தினருக்கான கல்வி திட்டத்தை வரும் கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தவுள்ளது. வெங்கையா நாயுடு தலைமை யில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு நாடு முழுவதும் கருத்துகள் அறியப்படுகிறன. பள்ளிகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்திட வேண்டுமா வேண்டாமா? என்பதற்கான சர்ச்சைகள் வலுவடைந்து வரும் சூழ்நிலையில் பாலியல் கல்வி வேண்டும், பாலியல் கல்வி இல்லையென்றால் மாணவர்களும், இளம் பருவத்தினரும் வழி கெட்டு விடுவார்கள் என்ற பிரச்சாரம் வெகுஜன ஊடகங் களாலும் சில தன்னார்வ அமைப்புகள், அறிவு ஜீவிகள் சிலரால் முன்வைக்கப் பட்டு தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

பாலியல் கல்வி இல்லாத காரணத்தால் என்னவோ இளைய தலைமுறையும் மாணவர்களும் சீரழிந்து வருவதை போலவும் அல்லது மாணவர்களின் பெற்றோர்களும், சமூக அமைப்புகளும் வீதியில் இறங்கி பாலியல் கல்வி வேண்டும் என்று போராட்டம் நடத்து வதைப் போன்று ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக் கிறார்கள் இவர்கள் பாராம்பரியம் கொண்டிருக்கிறது என்பதை மறுத்து விட முடியாது. இந்தியாவில் எச்.ஐ.விலியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 5.7 மில்லியன் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா வில் 53% குழந்தைகள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று அதிர்ச்சியூட்டும் தகவல்கள் நம்மை அதிர வைக்கின்றன.

இவைகளை களைய வேண்டு மென்றால் பள்ளிகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவு ஏற்கத் தக்கது அல்ல. ஏற்கனவே திரைப்படம் ஆபாசப் படங்கள், தொலைக் காட்சித் தொடர்கள் என்று மாணவர்களை மட்டுமல்லாமல் சமூகத்தின் அனைத்து தரப்பினர்களையும் தரம் கெடுப்பதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதில் செக்ஸ் கல்வி என்ற பெயரில் தெரியாத விஷயங்களையும், இன்னும் தெளிவாக சொல்லிக் கொடுத்து மாணவர்களை வழி தவற வைக்கப் போகிறார்களா?

எந்த ஒரு விஷயமும் தானாக அறிய வேண்டிய வயதில் அறிந்து கொள்வது தான் நல்லது. நமது முன்னோர்கள் எல்லாம் எந்த செக்ஸ் கல்வியை படித்தார்கள்? இன்று இருக்கும் வக்கிர புத்தியுடைய மனிதர்களை விட அவர்கள் மிக நல்லவர்களாத்தான் வாழ்ந்திருக்கிறார்கள். சிறு வயதில் பள்ளிப் பாடங்களை படிப்பதற்கே நேரமற்ற சூழ்நிலையில், பல பள்ளிகளில் தரமான அடிப்படைக் கல்வி, சுகாதாரமான கல்வி வளாகங்கள் ஏன் ஆசிரியர்கள் கூட இல்லாத அவல நிலை நாடு முழுவதும் நிலவிக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் 'செக்ஸ் கல்வியை' கற்றுக் கொடுக்கவே என்ன நிர்பந்தம் வந்து விட்டது அரசுக்கு.

செக்ஸ் கல்வியை கொண்டு வரலாமா என்று மாணவர்களிடமே ஆலோசனை கேட்பது தான் இன்னும் வேடிக்கை. தங்களுக்கு முழுமையான அறிவு இல்லாத விஷயத்தை பற்றி அவர்களால் எப்படி சரியான கருத்தை சொல்ல முடியும். நமது நாட்டில் பல்வேறு முனைகளிலிருந்து தாக்கி வரும் கலாச் சார சீர்கேடுக்கான ஆபாச சினிமாக்கள், தொலைக்காட்சி தொடர்கள், புத்தகங்கள் என இவற்றை தடை செய்வதை விட்டு விட்டு 'பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்' என்ற ரீதியில் அரசு செயல் படுவது பொறுப்பற்ற தன்மையாகும்.

பள்ளிகளிலே நடைமுறையில் இருந்து வந்த நீதி போதனை வகுப்புகளை இன்று பல பள்ளிகளில் நடத்தப்படுவதே இல்லை. நன்னெறி வகுப்புகளை மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயப்படுத்த வேண்டும். இருபாலர் பயிலும் முறை களை தடை செய்ய வேண்டும். ஒழுக்கக் கல்வி மூலமாகவே மாணவர்களை கலாச்சார சீர்கேட்டிலிருந்து காக்க முடியும். ஒவ்வொரு பள்ளிக்கும் ஆண், பெண் உயவியல் நிபுணர்களை மாணவர் தொடர்பு அலுவலராக நியமிக்கலாம்.

திருமணத்தை எதிர் நோக்கியுள்ள வர்கள், திருமணம் ஆன இளம் தம்பதியர்கள் இவர்களுக்கு சரியான பாலியல் அறிவை நிபுணர்கள் மூலம் கற்றுத் தருவதே நலம் பயக்கும்.
மேலை நாடுகளிலே இத்தகைய பாலியல் கல்வி திட்டங்களால் கிடைத்த பலன் என்ன? மேற்கத்திய நாடுகளில் டீன்லிஏஜ் வயதிலுள்ள மாணவ லி மாணவியர்கள் சகஜமாக உறவு கொள்வதும், அதனால் ஏற்படும் கருக்கலைப்புகளின் சதவீத எண்ணிக்கையும், செக்ஸ் கல்வி, கோ எஜுகேஷன் என்று இவர்களின் மேலைநாட்டு மோகங்களின் வெளிப்பாடு களை சிதற அடிக்கின்றன. மேலை நாடுகளிலே தோல்வி கண்ட திட்டங் களை தடுத்து நிறுத்த வேண்டியது இச்சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரின் கடமையாகும்.

பாலியல் கல்வி தொடர்பான எண்ணங்களையும் கருத்துக்களையும் அனுப்பி உங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்யுங்கள்.
Shri. J.Sundrial
Joint Secretary, Rajya Sabha Secretariat
Parliament House annexure,
New Delhi - 110001
Fax : 011-23012007
Email : sundrial@sunsad.nic.in

No comments: