Monday, January 14, 2008

புத்தாண்டின் பெயரால்...

கடந்த சில ஆண்டுகளாக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, புத்தாண்டு கொண்டாட் டங்கள் நகரங்களின் வீதிகளை நசுக்கித் தள்ளு கின்றன. பெருந்திரளான ஜனத்திரள் சாலை களில் நிரம்பி நின்று பேய்பிடித்தவர்களைப் போன்று, புத்தி மழுங்கி கத்தி, கதறி, ஓலமிட்டு, ஒரு புதிய ஆண்டை வரவேற்கும் அவலம் தொடர்கிறது.
ஆண்டின் தொடக்கத்திலேயே, இளைஞர் களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ என்று கருதும் அளவுக்கு உற்சாகம் கட்டுப்பாடு இழக்கிறது. குறிப்பாக டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னை ஆகிய பெருநகரங்கள் அன்றைய தினம் கலாச்சார சீரழிவின் விளிம்பு நிலைக்கு வந்து விடுகின்றன.. ஊடகங்கள் வர்த்தக நோக்கில் புத்தாண்டு தினத்தை ஒரு சர்வசமய பண்டிகை போல் வர்ணிக்கின்றன.

நட்சத்திர விடுதிகள் விழா ஏற்பாடுகள் செய்து தருகின்றன. சுமார் 1200 முதல் 10,000 ரூபாய் வரை அனுமதிக்காக, விடுதிகளின் தர அடிப்படையில் ஒரு நபருக்கென்று வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் கணினி தொடர்பான பணியிலிருப்பவர்களுக்கு இந்த தொகை என்பது அவர்களுடைய ஒரு நாள் வருமானமே அதை ஆண்டுக்கு ஒருமுறை செலவிடுவதில் சுமை இல்லை. இதனால் 'ராத்திரி கூத்தடிக்கும் இந்த கொண்டாட்ட கும்மாளம் படு ஜோராக நடக்கிறது.

உற்சாக மிகுதியாலும், வெறியாட்டத்தினாலும், அத்து மீறல்கள் நடக்கிறது. குறிப்பாக, பெண்கள் மீது பாலியல் வன்முறை மிகச் சாதாரணமானவை, பலர் வெளியில் கூறுவ தில்லை. சில நேரங்களில் செய்தியாகிறது. இந்த ஆண்டு மும்பை நட்சத்திர விடுதியில் நடந்த அட்டூழியம் பத்திரிகைகளில் புகைப்படத்துடன் வெளியானது. இரண்டு பெண்கள் மீது வெறி கொண்ட இளைஞர் கும்பல்; ஆளுமை செய்தது கும்பலில் 80 பேர் இருந்தனர் என்கிறார்கள்.. நிலைகுலைந்த பெண்கள் இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்களை அழைத்து வந்திருந்த இளைஞர்கள் செய்வதறியாது உணர்ச்சி இழந்தனர்.

இனிமேல் அவர்கள் இத்தகைய கழிப்பிடங்களை திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள். என்பதற்கு இந்த ஒரு சம்பவம் போதுமானது. சென்னையில், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா என்ற நட்சத்திர விடுதியில் நீச்சல் குளத்துக்கு மேலே கட்டப்பட்ட மேடை சரிந்ததில், பொறியியல் துறை இளைஞர் ஒருவர் பரிதாபமாக இறந்து போனார். சம்பவம், ஒரு மரணத்தை ஏற்படுத்திச் சென்றதை அடுத்தே அரசு நடவடிக்கை தொடங்குகிறது. விடுதியின் மேலாளர் கைது செய்யப்படுகிறார். நீச்சல் குளத்தின் மீது ஆண்டுதோறும் மேடை அமைக்கப்படுவது பழமையாம்.

விடுதியில் விழாக்கோலம் காண்கிறபோதே, காவல்துறை, முறையான கண்காணிப்பை செலுத்தியிருக்க வேண்டும். குற்ற முகாம்களில் இருந்தே, காவல்துறைக்கு லட்சங்களில் லஞ்சம் தரப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள், இதுபோன்ற நிகழ்வுகளால் உண்மைப்படுத்தப் படுகிறது. விடுதிகளில் நிர்வாண நடனங்கள் நடத்தக்கூடாது என்று உத்தரவிடும் காவல் துறை, அந்த உத்தரவுகள் செயல்படுத்தப் படுகிறதா என்ற கண்காணிப்பைத் தொடர்வ தில்லை.

பிழைப்பதற்காக விபச்சாரம் நடத்தும் கீழ்தட்டு மக்களைத் தேடிப்பிடித்து சிறையிலடைக்கும் காவல்துறை செல்வந்த வீட்டு செல்வங்கள் செய்யும் சில்மிஷங்களை கண்டு கொள்வதில்லை. 'மாடி வீட்டு' கலாச்சாரச் சீர்கேடுகளை, அவர்களது வாழ்க்கைத் தரம், அவர்களது படிப்பு மற்றும் தொழில் முனைவின் வழியே ஈட்டும் வருவாய் பயன் காரணமாக நடவடிக்கைகள் கமுக்கமாக தவிர்க்கப்படு கின்றன.

இனி வருங்காலங்களிலாவது புத்தாண்டின் பெயராலும் இதர பண்டிகைகளின் பெயராலும் நடைபெறும் காமக்களியாட்டங்களும், கலாச் சாரச் சீர்கேடுகளும் தடுக்கப்பட அரசும், காவல்துறையும் உரிய கவனம் செலுத்த வேண்டும். சமூக அமைப்புகள் இதுகுறித்த பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி நமது மண்ணின் பாரம்பரிய நாகரீகத்தை மீட்டெடுக்க வேண்டும்.

G.ATHESH

அமெரிக்கா, மனித குலத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல் மலேசிய உச்சநீதிமன்ற வழக்கறிஞர்






அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக அமைதிக்கும், மனித குலத்திற்கும் அச்சுறுத்தலாக விளங்கி வருவதாக மலேசிய உச்சநீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவருமான முஹைதீன் அப்துல் காதர் தெரிவித்திருக்கிறார். முஸ்லிம்கள் மற்றும் மூன்றாம் உலகநாடுகளிடையே அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் தாக்கம் என்ற தலைப்பில் முஹைதீன் சொற்பொழிவாற்றினார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சென்னை ஹோட்டல் பிரசிடெண்டில் 29,12,2007 அன்று வழக்குரைஞர்களுக்கான ஒருநாள் பயிலரங்கம் ஏற்பாடு செய்திருந்தது, இந்த கூட்டத்தில் முஹைதீன் பேசும்போது, அமெரிக்கா உலகையே ஆதிக்கம் செலுத்துவதாகவும், ஒவ்வொரு துறையிலும் தனது செல்வாக்கை நிலைநிறுத்துவதாகவும், அதை நோக்கமாகக் கொண்டே தனது வெளியுறவுக் கொள்கையை நிறுவியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சர்வதேச சட்டங்களையும், ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானங்களையும் உதாசீனம் செய்து, அடுக்கடுக்காய் பொய் கூறி ஈராக்கையும், ஆப்கானிஸ்தானையும் போரின் மூலம் ஆக்கிரமிப்பு செய்து இன்று பயங்கரவாதத்திற்கு எதிரான, போர் என்னும் பெயரால் ஈரானையும் சிரியாவையும் குறிவைக்கிறது.

கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளை இன்று சோமாலியா மக்களும் பாலஸ்தீன மக்களும் அனுபவித்து வருகிறார்கள் எனில் அதற்கு அமெரிக்காவின் நேரடியான, மற்றும் மறைமுகமாக மக்கள் விரோதக் கொள்கைகளும் மற்றும் அந்நாடுகள் மீதான அமெரிக்கா நிர்பந்தப்படுத்திய பொருளாதாரக் கொள்கையுமே காரணம் ஆகும் என்றும் காதர் தெரிவித்திருக்கிறார்.

முஸ்லிம் சமுதாயத்தை பிளவுபடுத்தி, அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தினை அபகரித்து உலகம் முழுவதையும் பொருளாதார ரீதியிலும், ராணுவ ரீதியிலும் செல்வாக்கு பெற விரும்புகிறது என்றும் நடுநிலையான மக்கள் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

என்னைக் கொன்று விடுவார்கள் தெஹல்கா செய்தியாளர் திடுக்கிடும் தகவல்


என்னைக் கொன்று விடுவார்கள் தெஹல்கா செய்தியாளர் திடுக்கிடும் தகவல்



இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலையாளர்களின் நேரடி வாக்கு மூலங்களை உலக அரங்கில் அம்பலப்படுத்திய தெஹல்கா செய்தியாளர் ஆசிஸ்கேதானுக்கு சங் பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.

இத்தகவலை ஆசிஸ் கெதான் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார். படுகொலைகளையும் பாலியல் வக்கிரங்களையும் இழைத்தவர்களும், சராசரி குஜராத்திகளும் கூட நடந்த பாதகச் செயல் குறித்து வெட்கப்படுவதாகத் தெரியவில்லை.

ஒவ்வொரு குஜராத்தியின் மனதிலும் விஷம் நிறைந்திருக்கிறது என்று வேதனை தெரிவித்த ஆசிஸ் கேதான் தன்னை கொலை செய்ய இரண்டு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து சுற்றி வளைத்தது. நான் இரண்டு வாகனங்களில் உள்ளவர்களையும் நேரடியாகப் பார்த்தேன் நுண்ணிய காமெராக்களால் நான் படம் பிடித்து வேன் என எண்ணியதாலோ எண்ணவோ அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றார்கள்.

நான் என கடமையைச் செய்தேன் அது சிலருக்கு கோபத்தை உண்டாக்கியிருக்கிறது. அந்த சமூக விரோதிகள் தொலைபேசி வழியாகவும் ஈலிமெயில் மூலமாகவும் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். கொலையாளிகளின் பட்டியலில் என்பெயர் உள்ளது. நான் கொல்லப்பட்டு விடுவேனோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது என மனம் வெதும்பி A.F.P என்ற வெளி நாட்டு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் ஆசிஷ் கேதான்