Wednesday, November 21, 2007

ஹஜ் யாத்திரை விளம்பரம் தேவையா?


இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமை இறைவனை துதிப்பதற்கான ஒன்றாகவே இருந்து வருகிறது. முன்பெல்லாம் ஹஜ் யாத்தி ரைக்குச் செல்வோர் விருந்தோம்பலை நடத்தி, உறவினர்களுக்கும், ஊர்க்காரர் களுக்கும் பயண செய்தியை தெரிவிப்பார் கள். பகையாளிகளை கூட சந்தித்து தங்கள் பயணத்திற்காக பிரார்த்திக்க சொல்வார்கள்.
ஆனால், இப்போதெல்லாம் ஹஜ் பயணத்தை ஒரு விளம்பரமாகவும், புகழுக் கான ஒன்றாகவும் சிலர் பயன்படுத்துவது வருத்தத்திற்குரிய செய்தியாகும். இதனால் தூய எண்ணங்களோடு ஹஜ்ஜுக்குப் புறப்படும் ஹாஜிகளுக்கும் மரியாதைக் குறைவு ஏற்படுகிறது.
பள்ளிவாசல்களில் ஜும்மா தொழு கைக்குப் பிறகு பயண செய்தியை அறிவிப்பது விருந்தோம்பல் செய்வது இவையெல்லாம் குற்றமாக பார்க்கப் படுவதில்லை. யாரும் இதை விமர்சிக்கவும் மாட்டார்கள். ஆனால் சமீப வருடங் களாக நிலை மாறி வருகிறது. அரசியல் வாதிகளை அழைத்து வாழ்த் தரங்கம் நடத்துவது, ராட்சத டிஜிட்டல் பேனர்கள், சுவர் விளம்பரங்கள், ஆள் உயர போஸ்டரில் ஹஜ் பயணியின் சிரிக்கும் படம், வாழ்த்து சுவரோட்டிகள் என 'அரசியல்' வாடை வீசத் தொடங்கி யுள்ளது.
இவையெல்லாம் முற்றிலும் மார்க்கத் திற்கு விரோத மான செயல்களாகும் இப்படியெல்லாம் செய்து ஹஜ் யாத்தி ரைக்கு செல்வது அதன் நோக்கத்தை சிதைப்பதாகும். இதையெல்லாம் செய் பவர்கள் யார் என்பதை கவனித்தால் அவர்கள் இதற்கு முன்பு மார்க்கத்தை சரிவர பின்பற்றாமல் ஜும்மாவுக்கு மட்டுமே பள்ளிவாசலுக்கு வருகை தருபவர்களாக இருப்பவர்கள் என்பது தான்!
பொதுவாக ஐவேளை தொழுகைப் பேணுபவர்களும், மார்க்ககத் தின்பால் ஈடுபாடு உடையவர்களும் இதுபோன்ற 'அரசியல்' கூத்துகளை நடத்துவதில்லை. சிறிய விருந்துடன் பயண செய்தியை கூறிவிட்டு புறப்படுகிறார்கள். அவர் களை ஊர் மக்களும், ஜமாத்தோடு கூடி வழியனுப்பி வைக்கி றார்கள்.
இப்படிப்பட்ட உண்மையான ஹஜ் யாத்திரீகள் பெருமைக்கும், புகழுக்கும் விளம்பரம் செய்து ஹஜ்ஜுக்கு புறப்படும் நபர் களால் பாதிப்புக்குள்ளாகிறார்கள். முன்பெல்லாம் மாற்றுமத நண்பர்களும் கூட, மக்காவுக்கு செல்வதை மரியாதை யுடன் நோக்குவார்கள். அவர்களும் தங்கள் முஸ்லிம் நண்பர்களை வழிய னுப்ப பழங்களோடும், இனிப்புகளோடும் வருவார்கள். இப்போதும் வருகிறார்கள்.அவர்களும் கூட இத்தகைய விளம்பர பிரியர்களின் நடவடிக்கைகளினால், ஹஜ் பயணத்தின் நோக்கத்தைப் பற்றி தவறாக புரிந்து கொள்ளும் சூழல் உருவாகிறது. இதெல்லாம் குர்ஆன் ஹதீஸ் நெறிமுறைகளுக்கு எதிரானவை என்பதை அவர்களுக்கு இதை சுட்டிக் காட்டுவது நமது கடமையாகும்.
இந்நிலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். உலமாக்கள் இது குறித்து ஜும்ஆ பிரசங்கத்தில் அறிவுறுத்த வேண்டும். ஜமாத் தலைவர்கள் இதற்கு துணை புரிய வேண்டும்.
இல்லையெனில் புனிதமான ஹஜ் யாத்திரை எதிர்காலத்தில் கேலிக்குரிய தாக மாறிவிடும். இதை தடுக்காதவர்கள், நாளை மறுமையில் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டி வரும்.
இதை படிக்கும் சகோதரர்கள் துண்டு பிரசுரங்கள் மூலமாகவோ, பிரதி எடுத்தோ வினியோகித்து சமூகத்தில் தீமைகள் பரவாமல் தடுத்து நிறுத்த உதவ வேண்டும்.

Thursday, November 15, 2007

முஸ்லிம்கள் முகத்தில் விழிப்பதற்கே அவமானமாக இருக்கிறது...

தமிழ்மாறன்

குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலை நாட்டிற்கு அவமானம், நீதித்துறைக்கு அவமானம் என்று பரவலாக பேசப்படு கிறதே ஒழிய பெருமைக்குரிய ஹிந்து மதத்தின் பேரால் இத்தகைய காட்டு மிராண்டித்தனத்தை நிகழ்த்திய கயவர் களைக் கண்டிக்க யாருக்கும் நா எழவில்லை.

தமது மதத்தை களங்கப்படுத்திய வர்கள் குறித்து பெரும்பாலான ஹிந்து குரு பீடங்கள், மகா சன்னிதானங்கள் கண்டுகொள்ளவேயில்லை, (ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சுவாமி அக்னிவேஷ் மட்டும் விதி விலக்கு) நமது நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு யார் காரணம் என்பது கண்டறியப்படுவதற்கு முன்பே முஸ்லிம் பெயர்கள் ஊடகங்களில் உச்சரிக்கப்படுகின்றன. ஊடகங்கள் குறிப்பிடும் நபர்களோ இயக்கங்களோ தடைசெய்யப்பட்ட ஒன்றாகவே இருக்கும். இருப்பினும் மனித உயிர்கள் பலியாவதைக் கண்டு மனம் பொறுக்காத முஸ்லிம் அமைப்புகள். தலைவர்கள் உடனடியாக தங்களது கண்டனங்களை பதிவு செய்வார்கள். இருந்தாலும் முஸ்லிம்களை வேதனைப்படுத்தும் வகையில் செய்திகளை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிடும். எனது கேள்வி அது பற்றியதல்ல? முஸ்லிம்களைப்பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்றாகிவிட்டது.

எங்கேயோ எவனோ நிகழ்த்திய குண்டு வெடிப்பிற்காக ஒட்டு மொத்த முஸ்லிம்களின் இதயங்களையும் குத்திக்கிழிக்க குரு மூர்த்திகளின் எழுதுகோல்கள் ரத்த தாகத்துடன் காத்திருக்கும்.

வெடிகுண்டு சம்வங்களில் தொடர்புடையவன் என்று கூறுவோர்கள் கூட தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பெயர்களைத் தான் கூறுவது வழக்கம். நமது ஐயம் என்னவெனில் குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் ஈடுபட்ட இயக்கங்கள் அனைத்தும் நாட்டு மக்களிடையே செயல்படும் இயக்கங் களாகவே இருக்கின்றன. பாஜக, ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி.. பஜ்ரங்தள், ஏபி.வி.பி. போன்றவை பதிவு செய்யப் பட்ட இயக்கங்கள் பாஜக அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி. ஆளுங்கட்சியாக இருந்து விட்டு தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. அது மட்டுமின்றி அடுத்து ஆளுங்கட்சியாக வரவும் அது துடித்துக் கொண்டிருக்கிறது.

இங்குள்ள பல பிரமுகர்கள், அமைப்புகள் சாமியார்கள் என பல்வேறு தரப்பின ரும் சங்பரிவாருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கொண்டுள் ளனர். ஆர்.எஸ்.எஸ். நடத்தும் குரு பூஜைகளிலும், இந்து முன்னணியால் நடத்தப்படும் திருவிளக்கு பூஜைகளிலும் முக்கிய வர்த்தகப் புள்ளிகளும் கலந்து கொள்கின்றனர். பொது மனிதர்கள் வேடம் போடும் இவர்களோ, நாட்டின் பெரும் பான்மையான வெகுஜன ஊடகங்களோ குஜராத் இனப்படுகொலை குறித்து ஏதும் சொல்ல வில்லையே? என்பது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அது அவர்களுக்கு வியப்பாக இருக்கலாம் நமக்கு அவ்வா றல்ல, நம்முடைய சந்தேகங்களெல்லாம் கோத்ராவில் நிகழ்ந்த விபத்தை முஸ்லிம்கள் செய்த சதியாக செய்திகளை பரப்பி திட்டமிட்ட படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் சொன்னதெல்லாம் ஆதாரமற்ற கட்டுக்கதை என பானர்ஜி கமிஷன் ரிப்போர்ட் கூறியது. தற்போது தெஹல்காவின் பதிவுகளும் நிரூபிக் கின்றன. சாட்சிகளை மிரட்டி முஸ்லிம்கள் மீது பழிபோடச் சொன்ன குஜராத் காவல் துறையின் ஈனச்செயலும் அதனை முழுநேரக் கடமையாகச் செய்த சங்பரிவாரின் ஆண்மையற்ற செயல் குறித்த செய்திகள் வரத்தொடங்கியுள்ள நிலையில், பொய்யான ஒரு தகவலை கர சேவர்களின் பெயரால் ஹிந்து மதத்தின் பெயரால் பரப்பியதால் அநியாயமாக படுகொலைகள் நிகழ்த்தியது குறித்து இங்குயாரும் வெட்கப்படவில்லையே? ஏன்? முஸ்லிம்கள் தானே செத்துத் தொலையட்டும் என்று அவர்கள் ஆறுதலடைந்து தொலையட்டும். ஆனால் ஹிந்து மதத்தின் பெயர் உலக அளவில் மாசுபட்டு போனதே இது குறித்து இவர்களுக்கு சிறிதும் கவலை யில்லையே?

தெஹல்கா பதிவுகளில் கயவர்களின் வாக்கு மூலங்களைப் பார்க்கும் போது கோத்ராவில் நடந்தது விபத்தல்ல. முஸ்லிம்கள் நடத்திய சதியுமல்ல. சங்பரிவார் சக்திகளால் நடத்தப்பட்ட கொடும் சதி என்பது நிரூபிக்கப்பட்டுள் ளது. ஹிந்து மதத்தின் பெருமை குறித்து பெருமிதம் அடைபவர்கள் இது குறித்து கவலைப்படவில்லை என்பது குறித்து விளைக்குறிகள் விடைத்து நிற்கின்றன.

இந்த கொடும் சதிகள் குறித்து இவர்கள் ஒன்றும் அறியாமல் இருந்திருக்க வேண்டும். அதாவது 2007 அக்டோபர் 25 ஆம் தேதியிலிருந்து (தெஹல்கா உண்மைகளை அம்பலப்படுத்தியதிலிருந்து) இவர்கள் கோமாவில் கிடந்திருக்க வேண்டும் அல்லது இந்த குற்றச் செயல்கள் குறித்து மானசீகமாக பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. பெரும்பாலான ஊடகங்களும் குஜராத் இனப்படுகொலை குறித்து மூச்சு கூட விடவில்லை. இவர்களின் இழிசெயலைக் காணும் போது அவமானம் தாங்க முடியவில்லை.

முஸ்லிம்களின் முகங்களை ஏறிட்டுப் பார்க்கும் துணிச்சல் எனக்கு வரவில்லை. ஏனெனில் நான் மனித மனம் படைத்தவன்.

Wednesday, November 14, 2007

ஹோதா என்ன சாதாவா? காழ்ப்புணர்வு மிகுந்த ஜூனியர் விகடன் கட்டுரை


ஹோதா என்ன சாதாவா என்ற தலைப்பில் தமிழக முதல்வரின் தனிச் செயலாளர்களில் ஒருவரான முனீர் ஹோதா அவர்கள் மீது அவதூறு தெரிவித்து வெளியிட்ட கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பின்வரும் கடிதத்தை ஜூனியர் விகடன் வெளியீட்டாளர் பா. சீனிவாசன் அவர்களுக்கு 11.11.2007 அன்று அனுப்பியுள்ளார்கள்.



பெறுநர்

திரு. பா.சீனிவாசன் அவர்கள்
வெளியிட்டாளர்
ஜுனியர் விகடன்
34, கிரீம்ஸ் சாலை
சென்னை லி 600 006.


அன்புடையீர், நலம் பல சூழ்க...

ஜுனியர் விகடன் 9.11.2007 தேதியிட்ட இதழில் 'ஹோதா என்ன சாதாவா' என்ற தலைப்பில் தாங்கள் வெளியிட்ட கட்டுரையில் கடும் ஆட்சேபனைக்குரிய விஷமத்தனமானக் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

முதல்வரின் முதன்மைச் செயலாளரான திரு.முனீர் ஹோதா இ.ஆ.ப., அவர்களை இழிவுபடுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் உண்மைக்குப் புறம்பான பல செய்திகளை வெளியிட்டிருக்கிறீர்கள்.

இதேபோல் முதல்வரின் மற்றொரு செயலாளரான பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு. ராஜமாணிக்கம் இ.ஆ.ப., (ஒய்வு) அவர்களைப் பற்றியும் சில இதழ்களுக்கு முன்பு குற்றச்சாட்டுகளைப் பொழிந்து எழுதி இருந்தீர்கள்.

ஆதாரங்களற்ற அவதூறுகளை அடிப்படையாகக் கொண்டு, பரபரப்பு நோக்கில் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பதுதான் இதழியல் அறமா என்பதை தரம் வாய்ந்த பத்திரிகையின் பொறுப்பாளரான நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

திரு. முனீர் ஹோதாவை, அவரது நிர்வாக முடிவுகளை முன்வைத்து, நீங்கள் விமர்சிக்க உரிமை உண்டு. அதேநேரம், முஸ்லிம் இனப்பற்றோடு செயல்படுகிறார் என்றும் முஸ்லிம் அதிகாரிகளை முக்கியப் பொறுப்பில் நியமிக்கிறார் என்றும் அவருடைய செயல்பாடுகளுக்கு மதச்சாயம் பூசுகின்ற அருவறுப்பான வேலையை நீங்கள் செய்யலாமா என்பதை யோசிக்க வேண்டுகிறோம்.

திரு. ஃபருக்கி (இ.ஆ.ப) அவர்களை தமிழக அரசின் தொழில்துறைச் செயலாளராக நியமித்தது தமிழக அமைச்சரவை எடுத்த முடிவு. இதில் முனீர் ஹோதாவுக்கு என்ன பங்கு இருக்கிறது? அப்படி இருந்தால், ஆதாரத்தோடு எழுதுங்கள். அதை விட்டுவிட்டு 'இனப்பற்று' என்ற தலைப்பில் அவதூறுகளை எழுதுவது முறையல்ல.

'குழுமத்திலும் குதியாட்டம்' என்ற தலைப்பில் நீங்கள் எழுதியுள்ளவற்றில், ஜாஃபர் சேட், நஜ்முல் ஹோதா ஆகியோருக்கு பணி இடமாற்றம் செய்ததிலும், மதப்பற்று வெளிப்படுவதாக கொச்சைப்படுத்தி எழுதியுள்ளீர்கள். திரு. ஜாபர் சேட் (இ.கா.ப.) உளவுத்துறை தலைவராக நியமிக்கப்பட்டது கடந்த மே மாதத்தில். அப்போது திரு. முனீர் ஹோதா நீண்ட கால விடுப்பில் இருந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?

பிற மதத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு, அதே மதத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் பணிமாற்றம் செய்தால் இப்படி எழுதுவீர்களா?

முதல்வரின் செயலாளர் பொறுப்புக்கு இணையான பொறுப்புதான் தொழில்துறைச் செயலாளர் பொறுப்பும். இவ்வாறிருக்க முனீர் ஹோதாவின் முயற்சியில் தான் ஃபருக்கி நியமிக்கப்பட்டார் என்பதும், ஃபருக்கியை இவர் தான் ஆட்டிப் படைக்கப் போகிறார் என்பதும் அபத்தமான அவதூறுகள் ஆகும்.

யார் யாரை எதில் நியமிக்க வேண்டும் என்பது தமிழக முதல்வருக்கு நன்கு தெரியும். இதில் முதல்வரின் முதன்மைச் செயலாளருக்கு என்ன பங்கு இருக்கிறது?

பணிமாற்றம், பணி உயர்வு போன்றவை முதல்வரின் அனுமதிக்குப் போகாமல் நடக்க முடியுமா? முதல்வரின் செயலாளர்கள் தனி அதிகாரம் கொண்டவர்கள் அல்ல. முதல்வருக்கு உதவியாளர்களாக, ஆலோசகர்களாக மட்டுமே அவர்கள் செயல்பட முடியும். ஜு.வி. முதல்வரின் செயலாளர்களான முனீர் ஹோதா மற்றும் ராஜமாணிக்கம் மீது புழுதி வாரி இறைந்திருப்பது அது சில தீயசக்திகளின் தூண்டுதல்களுக்கு துணை போய் விட்டதோ என்று எண்ணத்தைத் தான் ஏற்படுத்தியுள்ளது.

உயர்பதவியில் இருப்பவர் முஸ்லிம் என்பதால், அவருக்கு மதச்சாயம் பூசி கொச்சைப் படுத்துவது, ஜு.வி போன்ற பத்திரிகைகளுக்கு தகுமான செயலா என்பதை நீங்கள் மனசாட்சியோடு யோசியுங்கள்.

'கடல் எல்லை பாதுகாப்பு' உள்நாட்டு உளவுத்துறை, பணம் கொட்டும் தொழில் துறை மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் என்று எல்லா இடங்களிலும் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களே நிர்வகிப்பது, யதார்த்தமாக நடந்த விஷய மாக யார்தான் ஒப்புக் கொள்வார்கள் லி என்று தாங்கள் எழுதியிருப்பதைப் பார்க்கும் போது, நாம் படிப்பது. ஜு.வி.யா இல்லை, சங்பரிவாராப் பத்திரிகையின் தமிழ் பதிப்பா? என்ற சந்தேகம் எழுந்தது.

தமிழகத்தில் பணியாற்றும் 296 ஐ.ஏ.எஸ் அலுவலர்களில் 10 பேர் மட்டுமே முஸ்லிம்கள். இதே போல் 231 ஐ.பி.எஸ் அலுவலர்களில் 8 பேர் மட்டுமே முஸ்லிம்கள். இவ்வாறு குறைந்த எண்ணிக்கையில் உள்ள முஸ்லிம் அதிகாரி களில் தமது திறமை, அற்பணிப்பு களங்கமற்ற சேவை மூலம் முத்திரைப் பதித்த ஒரு சில முஸ்லிம் அதிகாரிகள் முக்கிய பொறுப்பில் வருவதை பொறுத்துக் கொள்ளாதவர்களுக்கு ஜு.வி. வக்காலத்து வாங்குவது நியாயமா? உங்கள் வரிகள் தேசப் பற்று மிகுந்த இந்த அதிகாரிகளை மட்டுமல்ல மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் தேசப்பற்றையும் கொச்சைப்படுத்தியுள்ளது.

இந்திய தேசத்தைக் கட்டியமைத்து, இந்த தேசம் அடிமைப்பட்டபோது, விடுதலைக் குப் போராடி மற்ற சமூகங்களையெல்லாம் விட மிக அதிக அளவில் உடல், பொருள், ஆவியை இந்நாட்டிற்காக அர்ப்பணித்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், முக்கியப் பதவிகளில் இருக்கக்கூடாதா? ஏனிந்த காழ்ப்புணர்வு? உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல முக்கியத் துறைகளில் உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அறுதிப் பெருன்பான்மையாக இருப்பதை நீங்கள் கண்டித்து எழுதியதுண்டா?

முனீர் ஹோதா மீதான குற்றச்சாட்டுகளை முதல்வரே விசாரிக்க நினைத்தாலும் அரசுத்துறை அதிகாரிகள் மூலம் விசாரித்தால் பயனில்லை, நம்பிக்கையான தனியார் ஏஜென்ஸி மூலம் தான் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளீர்கள். நல்லவேளை, இந்து முன்னணி, பா.ஜ.க., அதிமுக போன்ற அமைப்புகள் மூலம் தான் முனீர் ஹோதாவை விசாரிக்க வேண்டும், என்று நீங்கள் எழுதவில்லை. இந்தப் பெருந்தன்மையை பாராட்டுகிறோம்.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம். அதன் நேர்மையும், நம்பகத்தன்மை யும் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

உயரதிகாரிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்த வேண்டிய மகத்தான பணி இதழ்களுக்குரியது. மதக் காழ்ப்புணர்வோடு எழுதுவது இதழியலையே இழுக்குப் படுத்துவதாக அமையும்.

முனீர் ஹோதா பற்றிய ஜு.வி.யின் காழ்ப்புணர்வு மிகுந்த கட்டுரையைக் கண்டிக்கிறோம்.

ஒரு தனிப்பட்ட அதிகாரியை தரக்குறைவாக எழுதும் முயற்சியில், ஒரு சமுதாயத் தையே தாங்கள் இழிவுபடுத்தியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

இக்கடிதத்தை நீங்கள் பிரசுரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நான் எழுதவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அரசு அதிகாரிகüன் செயல்களுக்கு மதச் சாயம் பூசி அவர்களையும், அவர்கள் சார்ந்த சமுதாயத்தையும் கொச்சைப்படுத்தும் மஞ்சள் ரக இதழியல் மாண்பை நீங்கள் கடைப்பிடிக்கக்கூடாது என்ற நோக்கத் துடன் தான் இதனை எழுதியுள்ளேன்.

(எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்)

வாணியம்பாடி: பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏன்?


வாணியம்பாடி: பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏன்?
ஆய்வுக் கட்டுரை
வி.என். முகம்மது உசேன்

கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள முஸ்லிம்கள் சிங்கப்பூர், மலேசியா, பர்மா, சைகோன், சிலோன் என்று வெüநாடுகளுக்கு வேலை தேடிச் சென்ற போது, வடஆற்காடு என்று அழைக்கப் பட்டு வந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், பேர்ணாம்பட்டு மேல்விஷாரம் நகரங்கüல் வாழ்ந்த முஸ்லிம்கள், தோல் தொழிற்சாலைகளை நிறுவினர். இதனால், தொழில் முனைவோருக்கு வருவாய் வந்ததோடு மட்டுமல்லாமல், பல ஆயிரக்கணக்கான குடும்பங்களை வாழவைக்க வேலை வாய்ப்புகள் கிடைத்தன.

வாணியம்பாடியின் பொருளாதார வளர்ச்சியால் எவ்வளவு முன்னேற்றம் அடைந்தது என்பதற்கு சில உதாரணங் களைக் காணலாம். சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாணியம்பாடியில் உள்ள முஸ்லிம்கள் தொலை நோக்கோடு முஸ்லிம்கள் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இஸ்லாமியக் கல்வி அறக் கட்டளையை ஆரம்பித்தனர். அதன் வழியே ஓர் உயர்நிலைப் பளளியையும், மேல்படிப்பிற்காக இஸ்லாமியா கல்லூரியையும் ஆரம்பித்தனர். ராஜகிரியிலிருந்து ஒருவர் 75 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இஸ்லாமியாக் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்க வருபவருக்கும் இந்தக் கல்லூரி உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமல்ல, ஆம்பூர், திருப்பத்தூர் வாசிகளுக்கு மட்டுமல்ல, வெளிமாவட்ட, வெளி மாநில, சிறுபான்மையினருக்கு மேல்படிப்பு கற்க வாய்ப்பளித்தது.

வாணியம்பாடி முஸ்லிம்கள் வாழ் வாங்கு வாழ்ந்தனர் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு, பர்தா அணிந்த பெண்கள் பொழுதுபோக்கிற்காக இந்தியாவிலேயே பிரத்யேகமாக பெண்களுக்காக பூங்கா அமைத்தனர். தோல் தொழில் இங்கு எவ்வளவு செழிப்படைந்து இருந்தது என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், வாணியம்பாடி கச்சேரி ரோட்டில் டேனரி கட்டிய அதன் உரிமையாளர் தங்கத்தாலான பூட்டையும், சாவியையும் அதனைத் திறந்து வைத்த ஆங்கிலேய இறக்குமதியாளருக்கு அன்பüப்பாக அளித்தாரென்றால், வாணியம்பாடி எவ்வளவு பொருளாதார செழிப்பு அடைந்திருந்தது என்பது விளங்கும். முஸ்லிம்கள் நடத்தும் தோல் கடைகளில் பல இந்து மேலாளர்கள், லெதர் டெக்னிசியன்கள், தொழிலாளர்கள் சரளமாக உருது பேசுவது கண்டால் வியப்பாக இருக்கும்.

பொருளாதார வளர்ச்சியும், கல்வியறிவும் பெற்ற வாணியம்பாடி முஸ்லிம்கள் சமூக சீர்திருத்தத்திலும் முன்னேறியிருந்தனர். தென்மாவட்டங்கüல் சில இடங் கüல் வாழும் முஸ்லிம்கள் இந்தக் காலத்திலும் திருமணத்திற்காக அலங்கரிக்கப்பட்ட பந்தல்கள், தோரணங்கள், மின் விளக்கு கள், ஊர்வலங்கள், வாத்தியங்கள் என்று நடைபெறும்போது, 40 ஆண்டுகளுக்கு முன்னரே முஸ்லிம் திருமணங்கள் எளிமையா குறித்த நேரத்தில் பள்ளிவாசலில் நடைபெற்று வந்தன. பள்ளிவாசலில் நடைபெறும் திருமணத்திலும், பின்னர் மாப்பிள்ளை வீட்டில் நடைபெறும் சக விருந்திலும், பல இந்து நண்பர்கள் கலந்துகொள்வது இங்குள்ள சமூக ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும். வாணியம்பாடி என்றால் எப்படி தோல் தொழில் நினைவிற்கு வருகிறதோ அதைப் போன்று இங்கு தயார் செய்யப்படும் பிரியாணியும் பெயர் பெற்றதாகும். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கடைசி யாக இங்கு வந்தபோது பிரியாணியை சாப்பிட்டு விட்டு இது போன்ற சுவையான பிரியாணியை இதுவரை சாப்பிட்டதில்லை என்று கூறி அதனைத் தயார் செய்த சமையல்காரரை தன்னுடன் விமானத்தில் அழைத்துச் சென்று, அவர் இறக்கும் வரை அவரது வீட்டில் சமையல் செய்துவத்தாரென்றால் வாணியம்பாடியில் தயாராகும் பிரியாணியின் சிறப்பு விளங்கும்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள தோலாடை உற்பத்தியாகும் நகரங்களில் வெவ்வேறு தோல்கள் உற்பத்தி செய்யப் பட்டன. வாணியம்பாடியில் செம்மறி ஆட்டுத்தோலும், ஆம்பூரில் வெள்ளாட்டுத் தோலும், பேர்ணாம்பட்டில் மாட்டுத்தோலும், மேல்விஷாரம், ராணிப்பேட்டையில் கன்றுத் தோல்களும் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்ற நாடுகளிலும், வட இந்தியாவிலும் உள்ள ஆட்டுத் தோல் களை விட, மதுரை கசாயில் கிடைக்கும் செம்மறி ஆட்டுத் தோல் தான் உலகிலேயே கிடைக்கும் ஆட்டுத் தோல்கüல் மிகவும் சிறந்தவை. மதுரையும் அதன் சுற்று வட்டாரத்தில் கிடைக்கும் தோல் பதனிடப்பட்டு ஒப்பனை செய்தபின் மிகவும் மென்மையாக இருப்பதுடன், உறுதியாகவும் அழுத்தமாகவும் இருக்கும். பெண்கள் காலணி செய்வதற்கும், தோல் ஆடைகள் தயாரிக்கவும் மிகவும் சிறந்தவை.

கடந்த ஏழு ஆண்டுகளாக வெüநாட்டி லிருந்து தோல் ஆடைகளுக்கு வரும் ஆர்டர்கள் மிகவும் குறைந்து விட்டன. எனவே இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் தோல் ஆடைகள் குறைந்தன. பல தோலாடைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் டெல்லி, சென்னை போன்ற நகரங்களில் மூடப்பட்டு விட்டன. இந்த நிறுவனங்களு க்கு ஒப்பனை செய்யப்பட்ட தோல்களை சப்ளை செய்யும் வாணியம்பாடி தோல் கடைகள் மிகவும் பாதிக்கப்பட்டன. தினமும் 20லி25 லாரிகளில் வெளியூரிலிருந்து பச்சைத் தோல்கள் வாணியம்பாடிக்கு வரும். அது இன்று நான்கு, ஐந்து என்ற நிலைக்கு வந்துள்ளது. மற்ற மாநிலங்கüலும் தோல் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. வாணி யம்பாடியில் நிலைமை மோசமானதற்கு மற்றொரு காரணமாகும். கடந்த ஒரு வருடத்தில் அமெரிக்க டாலரின் மதிப்பு 45 ரூபாயிலிருந்து 39 ரூபாய்க்கு வீழ்ந்தது. பல நிறுவனங்கள் நஷ்டத்திற்குள்ளான. கடந்த ஏழு ஆண்டுகளில் வாணியம்பாடி யில் தோல் தொழில் தொடர்ந்து தொய்வு கொண்டதால் பல குடும்பங்கள் வாணியம் பாடியிலிருந்து மாற்றுத் தொழில் செய்யும் நோக்கோடு பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் என்று குடிபெயர்ந்தன.

உலகளவில் தோல் ஆடைகளுக்கான தேவைப்பாடு பல காரணங்களால் குறைந்து விட்டது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகüல் உள்ள நுகர்வோர் ஒரு காலத்தில் ஒரு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தோலாடைகள் வாங்வர். தற்போது அவர்கள் இரண்டு, மூன்று வருடங்களுக்கு ஒன்று வாங்கினால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது. தோலாடைகளை நவீன முறையில் டிரைகிளினீங் செய்வதும் இதற்கு உதவியது. தோல் அல்லாத சிந்தடிக் பொருள்களால் ஆடைகள் செய்து குறைந்த விலையில் வெüநாட்டு சந்தைகளில் விற்கப்படுகின்றன. வாணியம் பாடி தோல் தொழிற்சாலைகள் தொய்வு அடைந்ததற்கு சீனாவும் ஒரு காரணம். மிகக் குறைந்த விலையில் தோலாடைகள் உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்து, இந்தியாவை பல சந்தைகளிலிருந்தும் விரட்டியடித்து விட்டது சீனா.

வாணியம்பாடியில் உள்ள தோல் தொழிற்சாலைகள் காலப்போக்கில் எண்ணிக்கையில் பெருகினவே ஒழிய, 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலை களைப் போல் செங்குத்தாக வளரவில்லை. ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலைகள் கடந்த முப்பது ஆண்டுகளில் தோல் உற்பத்தியுடன், தோல் காலணி உற்பத்தி யிலும் ஈடுபட்டு இன்று இந்தியாவில் மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசியாவிலேயே தோல் காலணி உற்பத்தி செய்யும் மையங் கüல் மிக முக்கியமான நகரமாகியது. மிகுதமானவை முஸ்லிம்களால் நடத்தப் படும், 50க்கும் மேற்பட்ட தோல் காலணி தொழிற் சாலைகள், ஒரு லட்சம் பேருக்கு மேலான ஆண், பெண்களுக்கு வேலை வாய்ப்பளித்து பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணி ஈட்டி வருகிறது.
கடந்த ஒரு வருடமாக வாணியம்பாடி தோல் தொழிற்சாலைகள், தோலாடை களுக்கான தோலை தவிர்த்து, தோல் காலணிக்கான தோலை உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சில சிறியதாக காலணி தொழிற்சாலைகளும் வருகின்றன. இவைகள் பெருகி பெரிய தொழிற்சாலைகளாக மாறினால், வாணியம் பாடி திரும்பவும் பொருளாதார முன்னேற்றப் பாதையில் செல்ல வாய்ப்புள்ளது.

வாணியம்பாடியைச் சுற்றிலும் உள்ள மலையடிவாழ் கிராமங்கüல் காய்கள், கனிகள், பூக்கள் நிறைவாக விளைகின்றன. இவைகüன் ஏற்றுமதி இந்தியாவிலிருந்து அதிகரித்து வருகின்றது. வாணியம்பாடி யில் உள்ள முனைவர்கள் இந்தப் புதிய தொழில்கüல் முயற்சி செய்தால் பொருளாதார வளாச்சிக்கு மிகவும் உதவும். இந்த தோல் தொழிலில் சிறுபான்மையினர் அதிகமாக ஈடுபட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகமாக கிடைத்துள்ளன. தமிழகத்தில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த இந்தத் தொழில் கடந்த காலங்கüல் தொய்வு கண்டுள்ளது. ஒரு கமிட்டி அமைத்து இந்தத் தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து சரிசெய்வது மாநில அரசின் பொறுப்பாகும்.

தோல் தொழிற்சாலைகüலிருந்து வெüயாகும் கழிவு நீரை சுத்தப்படுத்துவது வெளியில் விடுவதால் பெரும்செலவு ஏற்படுகிறது. இதில் கணிசமான தொகையை மத்திய மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டால், வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கும் இந்தத் தொழில் வளர்வதற்கு மிகவும் உதவும். இங்குள்ள அரசாங்க மருத்துவமனையை மேம்படுத்துதல், கச்சேரி ரோட்டிற்கும், வளையம்பேட்டிற்கும் நடுவில் கால்வாயில் உள்ள பாலம் இடிந்து ஐந்து ஆறு ஆண்டுகள் ஆகின்றன. செப்பனிட இங்குள்ள தமுமுகவினர் முயற்சி செய்தால் அவர்கள் ஏற்கெனவே செய்துவரும் தொண்டிற்கு மற்றுமொரு முத்தாய்ப்பாக அமையும்.

Monday, November 12, 2007

கருநாகம் புகுந்த கர்நாடகம்


சர்ஜுன்
தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கர்நாடகவில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. 20 மாதங்கள் மதசார்பற்ற (?) ஜனதாதளத்தின் தலைமையில் ஆட்சியும், அடுத்த 20 மாதங்களுக்கு பாரதீய ஜனதா தலைமையிலும் ஆட்சி செய்வது என வாய்மொழியாக முடிவு செய்யப்பட்டது.

சந்தர்ப்பவாத தேவேகவுடா கட்சியினர் தங்களுக்கு வாக்களித்த மக்களை மடையர்களாக எண்ணிக்கொண்டு மதவாத பாஜகவுடன் கை கோர்த்தனர். 20 மாதங்கள் முதல்வர் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்த தேவேகவுடாவின் புதல்வர் குமாரசாமி பதவி சுகத்தில் திளைத்திருந்த வேளையில் உடுப்பியும் மங்களூரும் காவி பாசிஷவாதிகளிடம் மாட்டிக்கொண்டு திணறித் தவித்தது. அப்பாவி முஸ்லிம்கள் சொல்லொணா துயரத்திற்கு இலக்காயினர்.

மதசார்பற்ற ஜனதாதளம் என்ற பெயரில் கட்சி நடத்துபவர்கள் வைத்துக் கொண்ட வெட்கங்கெட்ட கூட்டணியால் இத்தகைய அவலம் நடந்தது. மதசார்பற்ற ஜனதாதளம் தனது கொள்கையைக் காற்றில் பறக்கவிட, பாஜக கொள்ளை பிடிப்பு பிசகாமல் நடந்து கொண்டது. அதோடு கர்நாடகாவை குஜராத்தாக மாற்றுவதே தமது இலட்சியம் என்றும் முழங்கினார்கள்.
பலதரப்பட்ட மக்களின் வாக்குகளைப் பெற்ற மதசார்பற்ற(?) ஜனதா தளம், மக்களின் பார்வையில் மிகவும் இழிந்த நிலைக்கு தள்ளப்பட்டது.

'முன்னாள் பிரதமர் தேவேகவுடா தனது பன்முக நடிப்புத் திறமையைக் காட்டியதன் மூலம் ஆஸ்கார் விருது கூடப் போதாது இவரின் திறமைக்கு'' என தொழில் முறை நடிகர்கள் கூட மூக்கில் விரலை வைத்தனர்.பாஜகவினர் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாநிலத்தை சுரண்டி காவிக் காடாக்கி கலவரப் பிரதேசமாக்கினர். மதசார்பற்ற ஜனதாதளத்தின் காலம் முடிந்த பிறகு பாஜகவின் வன்முறை என காவிப்பட்டாளம் ஆவலோடு காத்திருந்தது.பதவியைப் பிரிய மனமில்லாத தேவேகவுடா கட்சியினர் பாஜகவைப் பற்றி புதிதாக அறிந்து கொண்டதைப் போல, மதவாத கட்சி என்றும், கலவர பூமியாக கர்நாடகாவை மாற்றப் போகிறார்கள் என்றும் குற்றச்சாட்டுக்களை அடுக்கினர்.

முதன்முறையாக தென்னிந்தியாவில் ஆட்சியமைக்கக் கிடைத்த வாய்ப்பைத் தவற விடக் கூடாது என்ற தவிப்புடன் பாஜக கிடந்து அல்லாட வேறு வழியில் முதல்வர் பதவியை பெற முடியுமா என மதசார்பற்ற (?) ஜனதா தளம் வெறியுடன் திண்டாட இந்திய ஜனநாயகத்தை இழிவுப்படுத்திய பெருமைக்கு (!) இவ்விரு தரப்பினரும் ஆளானார்கள். சீசன் டிக்கெட் எடுக்காத குறையாக டெல்லியிருந்து தினமும் புறப்பட்டு வந்த பாஜக தலைவர்கள் தேவேகவுடா தரப்பினரை தாஜா செய்வதை தொடர்ந்தனர். அது பாஜகாவா இல்லை 'தாஜா'வா என்று சந்தேகம் எழுப்பும் அளவுக்கு அவர்களது நடவடிக்கை இருந்தது. தேவேகவுடா குடும்பம் நாசமாக போகட்டும் என கிராமத்துக் மூதாட்டி போல சாபம்விட்டனர் பாஜகவினர்.

தற்போது திரை மறைவில் நடந்த பேரங்களால் பாஜக தலைமையிலான ஆட்சிக்கு தேவேகவுடா கட்சி ஆதரவு வழங்குவதோடு அமைச்சரவையிலும் இடம் பெறப்போகிறது. முதல்வராக ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியான எடியூரப்பா முதல்வராகிறார். பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அத்வானிக்கும் ராஜ்நாத் சிங்கிற்கும் முகமெல்லாம் மலர்ச்சி அகமெல்லாம் பூரிப்பு.சமூக நீதிக்கான தளமாக இருந்த கர்நாடகாவில் கருநாகப் பாம்பு குடி புகுந்ததைப் போன்று காவி பாசிஷ வாதிகள் அரசமைத்து விட்டனர்.உலகம் மறக்க முடியாத பாசிஷ பயங்கரவாதிகள் இவர்கள் என்பதை காந்தியாரின் படுகொலையும், பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பும், குஜராத் இனப்படுகொலையும் நிரூபித்திருக்கிறது.

கர்நாடகத்தின் சமாதானத்தை சாய்க்க வடநாட்டில் தங்கள் தளங்களை இங்கு இழந்தவர்கள் இங்கு வந்துவிட்டனர். பதவிக்காக பாசிஷவாதிகளுக்கு பல்லக்கு தூக்கியவர்களுக்கு வாக்களித்தோமே என வேதனையில் விம்முகிறார்கள் சிறுபான்மை சமூகத்தினர்.சந்தர்ப்பவாத சதிகாரர்களுக்கும் பாசிஷ பயங்கரவாதிகளுக்கும் வாக்குச்சீட்டின் மூலம் பதிலடி கொடுக்க அவர்கள் தயாராகி வருகிறார்கள்.

பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் ஜனநாயகம்

சர்ஜுன்
பாகிஸ்தானில் பெயரளவுக்கு இருந்த ஜனநாயகம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு அவசர நிலை பிரகடனம் செய்யப் பட்டிருக்கிறது. எதிர்ப்பவர்கள் எவரும் இன்றி அதிபர் தேர்தலில் முஷாரஃப் ஜனநாயக (?) முறையில் வெற்றி பெற்ற பின்னரும் கூட நடுங்கி நிதானம் இழந்து அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு ஜனநாயகம் என்பது எட்டாக்கனியாக இருந்தது மேலும் எட்டாத உயரத்தில் போய் விட்டது.

பாகிஸ்தான் என்றால் முஷாரஃப், பெனாசிர், நவாஸ்ஷரீஃப், அமெரிக்கா, தலிபான் ஆதரவாளர்கள் என்று கலவையான குழப்பம் என்ற நிலைமாறி பாகிஸ்தானில் மக்களின் ஜனநாயக விழிப்புணர்வு, நீதித்துறையின் சுறுசுறுப் பான செயல் பாடுகள் என மாறியதால் பழைய பாகிஸ்தானாக அது தற்போது இல்லை.

மதரஸா மாணவர்களிடையே இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசையே எதிர்க்கும் அளவிற்கு அவர்கள் சென்றனர்.

இஸ்லாமிய நெறியை பரப்ப, புரிந்து கொள்ள அவர்கள் காட்டிய விவேகமற்ற வேகம் சர்ச்சைக்குள்ளாகி லால் மஸ்ஜி தில் நூற்றுக்கணக்கான மாணவர்களின் உயிரைக் குடித்தது.

அரசும், மதரஸாக்களின் தலைமைப் பீடங்களும் நிதானம் இழந்து செயல் பட்டதின் விளைவு இரு தரப்புக்குமே தோல்வியாக முடிந்தது.
நீதித்துறையின் சுறுசுறுப்பான செயல் பாடு பாகிஸ்தான் மக்களுக்கு மட்டுமின்றி சர்வதேச அளவிலும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இஃப்திகார் சவுத்ரி, நீதியை நிலை நாட்டும் முகமாக அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். ஆடித்தான் போனார் அதிபர் முஷாரஃப்.

பாகிஸ்தானின் மாற்றங்கள் ஏற்றங் களை நோக்கிச் சென்றாலும், தமது அதிகார வரம்புக்கு ஏமாற்றங்களையே பரிசாக அளிக்கும் என்பதை உணர்ந்து கொண்டார்.
பெனாசிருடன் வைத்துக் கொண்ட ரகசிய அதிகார பகிர்வு குறித்த உறவும் கராச்சி குண்டு வெடிப்பு சத்தத்தில் மாயமாய் மறைந்து போனது.

பாகிஸ்தானில் முஷாரஃபின் பிடி நழுவியதோடு இந்த துணைக் கண்டத் தில் அமெரிக்காவின் பிடி நழுவும் போக்கு நாளோருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் கூட்டமைப்பில் ரஷ்யா, சீனா, உஸ்பெ கிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகள் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தி இப்பிராந்தியத்தில் சீனாவும், ரஷ்யாவும் வலுப்பெறுவதை அமெரிக்கா வெளிப் படையாகக் கண்டு கொள்ளாதது போல் இருந்தாலும், உள்ளூர நடுக்கத்துடன் தன் கைவசம் உள்ள பாகிஸ்தானை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு பாகிஸ்தானின் ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்க மறைமுக காரண மாகவே மாறிவிட்டது.

இந்தியாவில் அணு ஆற்றல் ஒப்பந்தத் தில் மறைமுக அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா பாகிஸ்தானில் முஷாரஃபை கொம்பு சீவி விட்டிருக்கிறது விளைவு பாகிஸ்தான் ஜனநாயகம் அருங்காட்சி யகத்தில் வைக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது.

நாளை அது புதைபொருள் ஆராய்சிக் குரிய ஒன்றாக மாறக்கூடும்.
பாகிஸ்தானின் ஒற்றைத் தனி மனிதராய் முஷாரஃப் விளங்குகிறார். அவருக்கு ஆத்மார்த்தமான நட்பாக அதிபர் புஷ் மட்டுமே விளங்குகிறார். ஜனநாயகம் என்பது இவர்கள் இருவரின் நட்பு மட்டும் அல்லவே!

பாகிஸ்தான் இன்று எரிமலையாய் தகித்துக் கொண்டிருப்பதாகவே அங்கி ருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எரிமலையின் மேலிருந்து மகுடி வாசிக்கும் முஷாரஃபை நினைத்தால் பரிதாபம் ஏற்படுகிறது.

வேண்டாம் பாலியல் கல்வி!வேண்டும் ஒழுக்கக் கல்வி!!

மத்திய அரசாங்கம் வரும் கல்வி ஆண்டு முதல் யூனிசெப் (UNICEF) அமைப்பால் வடிவமைக்கப்பட்ட வளர் இளம் பருவத்தினருக்கான கல்வி திட்டத்தை வரும் கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தவுள்ளது. வெங்கையா நாயுடு தலைமை யில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு நாடு முழுவதும் கருத்துகள் அறியப்படுகிறன. பள்ளிகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்திட வேண்டுமா வேண்டாமா? என்பதற்கான சர்ச்சைகள் வலுவடைந்து வரும் சூழ்நிலையில் பாலியல் கல்வி வேண்டும், பாலியல் கல்வி இல்லையென்றால் மாணவர்களும், இளம் பருவத்தினரும் வழி கெட்டு விடுவார்கள் என்ற பிரச்சாரம் வெகுஜன ஊடகங் களாலும் சில தன்னார்வ அமைப்புகள், அறிவு ஜீவிகள் சிலரால் முன்வைக்கப் பட்டு தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

பாலியல் கல்வி இல்லாத காரணத்தால் என்னவோ இளைய தலைமுறையும் மாணவர்களும் சீரழிந்து வருவதை போலவும் அல்லது மாணவர்களின் பெற்றோர்களும், சமூக அமைப்புகளும் வீதியில் இறங்கி பாலியல் கல்வி வேண்டும் என்று போராட்டம் நடத்து வதைப் போன்று ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக் கிறார்கள் இவர்கள் பாராம்பரியம் கொண்டிருக்கிறது என்பதை மறுத்து விட முடியாது. இந்தியாவில் எச்.ஐ.விலியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 5.7 மில்லியன் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா வில் 53% குழந்தைகள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று அதிர்ச்சியூட்டும் தகவல்கள் நம்மை அதிர வைக்கின்றன.

இவைகளை களைய வேண்டு மென்றால் பள்ளிகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவு ஏற்கத் தக்கது அல்ல. ஏற்கனவே திரைப்படம் ஆபாசப் படங்கள், தொலைக் காட்சித் தொடர்கள் என்று மாணவர்களை மட்டுமல்லாமல் சமூகத்தின் அனைத்து தரப்பினர்களையும் தரம் கெடுப்பதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதில் செக்ஸ் கல்வி என்ற பெயரில் தெரியாத விஷயங்களையும், இன்னும் தெளிவாக சொல்லிக் கொடுத்து மாணவர்களை வழி தவற வைக்கப் போகிறார்களா?

எந்த ஒரு விஷயமும் தானாக அறிய வேண்டிய வயதில் அறிந்து கொள்வது தான் நல்லது. நமது முன்னோர்கள் எல்லாம் எந்த செக்ஸ் கல்வியை படித்தார்கள்? இன்று இருக்கும் வக்கிர புத்தியுடைய மனிதர்களை விட அவர்கள் மிக நல்லவர்களாத்தான் வாழ்ந்திருக்கிறார்கள். சிறு வயதில் பள்ளிப் பாடங்களை படிப்பதற்கே நேரமற்ற சூழ்நிலையில், பல பள்ளிகளில் தரமான அடிப்படைக் கல்வி, சுகாதாரமான கல்வி வளாகங்கள் ஏன் ஆசிரியர்கள் கூட இல்லாத அவல நிலை நாடு முழுவதும் நிலவிக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் 'செக்ஸ் கல்வியை' கற்றுக் கொடுக்கவே என்ன நிர்பந்தம் வந்து விட்டது அரசுக்கு.

செக்ஸ் கல்வியை கொண்டு வரலாமா என்று மாணவர்களிடமே ஆலோசனை கேட்பது தான் இன்னும் வேடிக்கை. தங்களுக்கு முழுமையான அறிவு இல்லாத விஷயத்தை பற்றி அவர்களால் எப்படி சரியான கருத்தை சொல்ல முடியும். நமது நாட்டில் பல்வேறு முனைகளிலிருந்து தாக்கி வரும் கலாச் சார சீர்கேடுக்கான ஆபாச சினிமாக்கள், தொலைக்காட்சி தொடர்கள், புத்தகங்கள் என இவற்றை தடை செய்வதை விட்டு விட்டு 'பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்' என்ற ரீதியில் அரசு செயல் படுவது பொறுப்பற்ற தன்மையாகும்.

பள்ளிகளிலே நடைமுறையில் இருந்து வந்த நீதி போதனை வகுப்புகளை இன்று பல பள்ளிகளில் நடத்தப்படுவதே இல்லை. நன்னெறி வகுப்புகளை மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயப்படுத்த வேண்டும். இருபாலர் பயிலும் முறை களை தடை செய்ய வேண்டும். ஒழுக்கக் கல்வி மூலமாகவே மாணவர்களை கலாச்சார சீர்கேட்டிலிருந்து காக்க முடியும். ஒவ்வொரு பள்ளிக்கும் ஆண், பெண் உயவியல் நிபுணர்களை மாணவர் தொடர்பு அலுவலராக நியமிக்கலாம்.

திருமணத்தை எதிர் நோக்கியுள்ள வர்கள், திருமணம் ஆன இளம் தம்பதியர்கள் இவர்களுக்கு சரியான பாலியல் அறிவை நிபுணர்கள் மூலம் கற்றுத் தருவதே நலம் பயக்கும்.
மேலை நாடுகளிலே இத்தகைய பாலியல் கல்வி திட்டங்களால் கிடைத்த பலன் என்ன? மேற்கத்திய நாடுகளில் டீன்லிஏஜ் வயதிலுள்ள மாணவ லி மாணவியர்கள் சகஜமாக உறவு கொள்வதும், அதனால் ஏற்படும் கருக்கலைப்புகளின் சதவீத எண்ணிக்கையும், செக்ஸ் கல்வி, கோ எஜுகேஷன் என்று இவர்களின் மேலைநாட்டு மோகங்களின் வெளிப்பாடு களை சிதற அடிக்கின்றன. மேலை நாடுகளிலே தோல்வி கண்ட திட்டங் களை தடுத்து நிறுத்த வேண்டியது இச்சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரின் கடமையாகும்.

பாலியல் கல்வி தொடர்பான எண்ணங்களையும் கருத்துக்களையும் அனுப்பி உங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்யுங்கள்.
Shri. J.Sundrial
Joint Secretary, Rajya Sabha Secretariat
Parliament House annexure,
New Delhi - 110001
Fax : 011-23012007
Email : sundrial@sunsad.nic.in

மோடியை தூக்கில் போடு - குமுதம்

கேள்வி: தெஹல்கா தோலுரித்துக் காட்டிய குஜராத் கலவர உண்மைகள் குறித்து?
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் (அது ஒரு விபத்து என்று முடிவானது வேறு விஷயம்) நடந்து முடிந்தவுடன் முஸ்லிம்களைப் பழிவாங்கும் திட்டம் அங்கிருந்த மத வெறியர்களிடம் தோன்றி விட்டது. அவர்களுக்குத் தேவை யெல்லாம் தலைவர் மோடியின் கண்ணசைவுதான். வந்தார் மோடி போலீஸை அழைத்து அவர்களை 'கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பாருங்கள், அல்லது இவர்களோடு சேர்ந்து கொண்டு அவர்களை அடித்துக் கொல்லுங்கள்' என்று கட்டளையிட்டார். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு அப்புறம் மகா கோரமான இனப்படு கொலை ஆரம்பித்தது. மனிதக்கறி தின்னும் ஓநாய்கள் வெறியுடன் பாய்ந்தன. படுகொலைகளை, கற்பழிப்புகளை, உடல் உறுப்புகளை அறுத்து எறிந்ததை எவ்வளவு ஆனந்தத்துடன் தெஹல்கா விடம் சொல்கிறார்கள் அந்தக் கொலை காரர்கள் ('ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த குழந்தையைக் கொன்றேன்'). ஒரு மாநிலத்தின் சட்ட ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியவர் ரத்த வெறி பிடித்த வானரப் படையைத் தூண்டிவிட்டு ஆயிரக்கணக் கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த கொடூரம் காந்தி பிறந்த மாநிலத்திலா நடந்தது? எத்தனை பேர் அந்தப் படுகொலைகளை சைக்கோத் தனத்துடன் விவரிக்கிறார்கள். எவ்வளவு மகிழ்ச்சியுடன் அந்த சம்பவங்களை அசை போடுகிறார்கள். ஒருவர் சொல் கிறார் ''மோடி மட்டும் முதல்வராக இல்லாதிருந்தால் அவரே முஸ்லிம் பகுதியில் குண்டுகளை வீசியிருப்பார்''. கொலைகாரர்களை வீடு தேடி வந்து பாராட்டிய ஒரு வெறிநாய், முதல்வர் பதவியில் இருப்பது வெட்கக்கேடு. மோடி இருக்க வேண்டிய இடம் தூக்குமேடை..


நன்றி குமுதம் (7.11.2007)

ஆதம்பாலம் தானாக உருவான மணல் திட்டு - வரலாற்றுப் பேராசிரியர் ஏ.ராமசாமி பேட்டி

ஆதம்பாலம் தானாக உருவான மணல் திட்டு இராமர் கட்டியதாகக் கூறுவது கட்டுக்கதை வரலாற்றுப் பேராசிரியர் ஏ.ராமசாமி பேட்டி
சேது சமுத்திரம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தில் இருக்கும் ஆதம் பாலம் தானாக உருவானது தான்; அதில் மனிதர்கள் நடந்து சென்றதற்கான ஆதாரமே இல்லை என்று வரலாற்றுப் பேராசிரியரும், தமிழக உயர் கல்விக்குழுத் துணைத் தலைவருமான ஏ. ராமசாமி கூறினார்.

வங்கக்கடல் பகுதியில் இருந்து செல்லும் கப்பல்கள்; கேரளம் உள்ளிட்ட அரபிக் கடல் பகுதியை சென்றடைய இலங்கையை சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் காலவிரயம், பொருள் விரயத்தைத் தடுக்க இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே கால்வாய் (சேது சமுத்திரத் திட்டம்) அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், இத்திட்டத்துக்காக ஆதம் பாலம் அல்லது ராமர் சேது பாலம் என்றழைக்கப்படும் மணல் திட்டுக்களை அகற்றக்கூடாது என்று மதவாத சக்திகள் எதிர்க்கின்றனர். இந்த நிலையில் ஆதம்பாலம் குறித்து தமிழ்நாடு உயர் கல்விக்குழு துணைத் தலைவரும், வரலாற்று துறையில் டாக்டர் பட்டம் பெற்றவருமான ஏ. ராமசாமி ஆதம் பாலம் பற்றி ஆராய்ந்து, ஒரு தொகுப்பினை தயாரித்துள்ளார்.

அது குறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதற்காகத் தான் இது பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தோம். ஆதம் பாலம் என்ற ஒன்று எப்படி உருவானது; அது இருந்ததா? அந்த பாலம் ராமருடன் சென்றதாகக் கூறுப்படும் வானர சேனையால் கட்டப்பட்டதாக என்ற கோணத்தில் இந்த ஆய்வு மேற்கொண்டோம். ராமாயணம் பதினேழரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், ராமாயணம் நடந்த இடமாகக் கூறப்படும் அயோத்தியில் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கவில்லை; அங்கு வெறும் காடுகளே இருந்தது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறி இருக்கிறார்கள்.

3 கர்நாடக போர்கள் நிகழ்ந்ததற்குப் பிறகு, 1763 ஆம் ஆண்டில் ராபட்பாக் என்ற கவர்னர் பதவியில் இருந்தார். அவர் காலத்தில் ஆதம் பாலம் சர்ச்சை தொடங்கியது. அப்போது லெப்டினன்ட் வில்லியம் ஸ்டீவன்ஸ் என்ற ராணுவ என்ஜினீயர் ஒருவரை, தனுஷ் கோடி தலைமன்னாரை இணைக்கும் ஆதம் பாலம் எனப்படும் மணல் திட்டுக்களை பற்றி ஆய்ந்து வருமாறு பாக் உத்தரவிட்டார்.
அந்த ஆளுநரின் பெயராலேயே பாக் ஜலசந்தி என்று அப்பகுதி அழைக்கப் படுகிறது. அதுபோல், ஆங்கிலேய குழுவில் இருந்த ஆதம் என்ற ஆராய்ச்சியாளரின் பெயரால் ஆதம்பாலம் என்று அது அழைக்கப்பட்டிருக்கக்கூடும். இதுதான் விஞ்ஞான ரீதியாக அங்கு மேற்கொள்ளப்பட்ட முதல் ஆய்வு ஆகும்.இதுபோல், மனிதனின் தொண்டைக்கு அருகில் முன்கழுத்துப் பகுதியில் உள்ள உறுப்புக்கு ஆதம்ஸ் ஆப்பிள் என்று பெயர். இது தலையையும், உடலையும் இணைக்கும் முக்கிய பகுதி ஆகும். இதுபோல், இலங்கையையும், இந்தியாவையும் இணைக்கப்பதுபோல் இப்பாலம் உள்ளதால், 'ஆதம் பாலம் என்று பெயரிட்டு இருக்கலாம் என்று ஐதராபாத்தில் உள்ள மத்திய தொலையுணர்வு ஆய்வு நிறுவன அதிகாரி பெருமாள் கூறுகிறார்.

1891 ம் ஆண்டில் ஜெர்மனியை சேர்ந்த ஜோஹன்னாஸ் வால்டர் என்ற ஜெர்மானியர், தனக்கு முன்பு ஆய்வு செய்தவர்களின் குறிப்புகளை வைத்துக் கொண்டு ஆதம்பாலத்தை நேரடியாக பார்த்து ஆய்வு செய்தார். அவர், பருவகால மாற்றம், கடல் நீரோட்டம், கடற்கரையில் இருந்து வந்த மணல் திட்டுகள் உருவாயின, கடல்மட்டம் உயரும்போது அவை மறைந்துவிடுகின்றன; குறையும்போது திட்டுகள் மேலே வருகின்றன என்று கூறியுள்ளார். வால்மீகி ராமாயணத்தல் உள்ள வரிகளை விரிவாக குறிப்பிடும் அவர், ஆதம் பாலத்தை வானரர்கள் கட்டினார்கள் என்பது ஒரு கட்டுக்கதை என அவர் தனது புத்தகத்தில் கூறிப்பிட்டுள்ளார்.ஆதம் பாலம் என்பது மணல் திட்டுகளால் ஆன ஒன்று. அது நிரந்தரமானது அல்ல. அந்த காலத்தில் இலங்கையில் இருந்தும், இங்கிருந்தும் மன்னர்கள் கப்பலில்தான் இருநாடுகளுக்கும் சென்று வந்தார்கள்.

ராமர் பாலம் இருந்திருந்தால் அதிலேயே அவர்கள் சென்றிருப்பார்கள். சேது பாலத்தில் மனிதர்கள் நடமாடியதற்கான ஆதாரமே இல்லை. பிரிட்ஜ் என்றால் பாலம் என்று மட்டும் அர்த்தம் அல்ல. நிரப்புதல், இணைப்பு என்ற அர்த்தமும் உண்டு. அதனால் இணைப்புப் பகுதி என்ற அளவில், ஆதம் பிரிட்ஜ் என்றழைப்பதில் தப்பில்லை. ராமர் பாலம் என்றழைக்கப்படும் திட்டுகள் 32 ஆயிரம் மீட்டர் நீளம் உள்ளது. சேது சமுத்திரத் திட்டத்துக்கு 300 மீட்டர் மட்டுமே தேவைப்படுகிறது. இதனால் பெரிதாக பாதிப்பு ஒன்றும் ஏற்பட்டு விடாது. இவ்வாறு ராமசாமி கூறினார்.

Tuesday, November 6, 2007

தண்டிக்கப்படும் அரசியல் சாசனம்

மரியம் குமாரன்

கோவை குண்டு வெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்ட 168 பேர்களில் அப்துல் நாசர் மதானி உட்பட 8 பேர் எவ்வித தண்டனையும் இல்லாமல் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டனர். 70 பேர் மீது கூட்டு சதி, கொலை உள்ளிட்ட கடுங்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டது. சிறு குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட 86 பேருக்கு அளிக்கப்பட்ட தண்டனை அவர்கள் சிறையிலிருந்த காலத்தை கணக்கில் கொண்டு கழித்து கொள்ளப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். 86ல் 5 பேர் மீது 'வேறு வழக்குகள்' உள்ளதால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடுங்குற்றம் நிரூபிக்கப்பட்ட 70 பேரில் 43 பேருக்கு ஆயுள் தண்டனையும், 26 பேருக்கு இரட்டை ஆயுளும் ஒருவரு க்கு மூன்று ஆயுளும், மற்றொருவருக்கு நான்கு ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டன. அப்ரூவர் ரியாசுர் ரஹ்மான் விடுதலை செய்யப்பட்டார். இருட்டுச் சிறைகளில் இவர்கள் இழந்த இளமையை யார் மீட்டுத்தரப் போகிறார் கள்? இதற்கு என்ன நீதி கிடைக்கப் போகிறது? என்ற ஆதங்கம் ஒருபுறம் மனதை அரித்தாலும், இப்போதாவது இவர்கள் விடுவிக்கப்பட்டார்களே என்று ஆறுதல் கொள்ள வேண்டியுள்ளது. அப்பாவிகள் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட வர்களில் கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துந்நாசர் மதானியும் ஒருவர்.

இவ்வழக்கில் 43 பேருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அல்உம்மா இயக்கத் தலைவர் எஸ்.ஏ.பாஷா, செயலாளர் அன்சாரி ஆகியோர் இதில் அடங்குவர்.

இவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என பல மதவாத அமைப்புகள் கோரிக்கை வைத்தனர். சில பத்திரிகைகளும் கூட அவ்வாறு எழுதி கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி உத்திராபதி மிக நிதானமாகவே இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

தூக்குத் தண்டனையே கூடாது என்று கோருபவர்கள் தங்கள் கோரிக்கைக்கு வலு சேர்ப்பது ஒருபுறமிருந்தாலும் மரண தண்டனை தேவை என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. அதேநேரம் கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப் பட்டிருக்குமேயானால் அது நியாயமற்ற தீர்ப்பாக அமைந்திருக்கும்.

தூக்குத் தண்டனை விதிக்கும் அளவுக்கு குற்றச்சாட்டுகள் துல்லியமாக நிரூபிக்கப்படவில்லை. மேலும் அப்பாவி களுக்கு விசாரணை முறையும் நீண்ட கால சிறையுமே பெரும் தண்டனைகளாகி விட்டன. பல்லாயிரம் பேர் உயிர்களைப் பறித்த நரேந்திர மோடி, பால்தாக்கரே, அத்வானி போன்ற கொடுமைக்காரர் களுக்கு இன்னும் தண்டனை வழங்கப் படவே இல்லை. மாறாக உயர்பதவிகளில் அவர்கள் உட்கார வைக்கப்பட்டு அரசியல் சாசனம் தண்டிக்கப்பட்டிருக்கிறது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வர்கள் ஏற்கனவே முக்கால்வாசி தண்டனைக் காலத்தைக் கடந்து விட்டார்கள். தீவிரவாதம் எதற்கும் தீர்வாக இருக்க முடியாது என்பதற்கு நம்மில் சில இளைஞர்கள் நல்ல சான்றுகளாகி விட்டார்கள். அவர்கள் பிறவித் தீவிரவாதிகள் இல்லை. அவர்களைத் தீவிரவாதிகளால் மாற்றியது யார்? அவர்களுக்கு என்ன தண்டனை?

'தீபங்களே தெரிந்து கொள்ளுங்கள். திரிகள்தான் எரிகின்றன, தூண்டுகோல் கள் சுகமாகத் தூங்குகின்றன' என்ற மேத்தாவின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன. இவர்களை இந்த நிலைக்கு ஆரம்பத்தில் தயார்படுத்தியவர்களை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. உணர்ச்சி வேகத்திற்குப் பலியானவர் களுக்கு தூக்குத் தண்டனை அளிக்காத இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

சாக்கடைகளை அழிக்காமல் கொசுக் களை மட்டும் குற்றம்சாட்டி பயனில்லை.
விளைவுகளுக்கு விலங்கு மாட்டி விட்டு காரணங்களைக் கைவிட்டு விடுவதும் நீதிக்கு அழகில்லை.

ஆம், இவர்கள் உருவானதைக்கான கா'ரணங்கள்' களையப்பட வேண்டும்

Sunday, November 4, 2007

2002 குஜராத் முஸ்லிம்கள் இனப்படுகொலை (டெஹல்கா வீடியோ தமிழில்

http://www.tmmkonline.org/tml/videos/gothra.htm

குஜராத் குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது


இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த உலகத்தில் மிகப்பெரிய இனப்படுகொலையில் (குஜராத் 2002) ஈடுபட்ட கயவர்களின் முகத்திரையை தெஹல்கா செய்தி ஏடு கிழித்தது. அதனைத் தொடர்ந்து குஜராத் முதல்வர், உள்துறை அமைச்சர், உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக உள்ளிட்ட நாட்டின் முன்னணி மனித உரிமை அமைப்புகள்லிகுடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தேர்தல் ஆணையம் மற்றும் இந்திய பிரதமர் ஆகியோருக்கு அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.2002ல் குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலையில் முதலமைச்சர் நரேந்திரமோடி அன்றைய உள்துறை அமைச்சர் கோர்தன் ஜடாஃபியா, அன்றைய அகமதாபாத் காவல்துறை ஆணையர் பி.சி. பாண்டே முஸ்லிம்களை கூட்டுப் படுகொலை செய்யவும், அவர்களது சொத்துக்களை அழிக்கவும் திட்டமிட்டு சதி செய்ததை தெஹல்கா புலனாய்வு குழு சந்தேகமின்றி நிரூபித்துள்ளது. முதலமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் அவர்களது மொத்த நிர்வாகமும் இந்த இனப் படுகொலைகளுக்காக திட்டமிட்டது மட்டு மின்றி அவர்களை அழித்தது மட்டுமின்றி கொலை யாளிகள், கற்பழிப்புக் குற்றவாளிகள் அனைவருக்கும் பத்திரமாக மறைந்து வாழ்வதற்கும் உறுதி அளித்துள்ள னர்.
மதசார்பற்ற கொள்கையின் அடிப்படை அம்சங் கள் கூட மீறப்பட்டன. மக்களின் வாழ்வு, சுதந்திரம், கண்ணியம் மற்றும் சொத்துக்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும் அரசியல் சாசன பொறுப் புணர்வை துறந்தது மோடி அரசு. நீதித்துறையின் முழு இயக்கமும் கோத்ரா விஷயத்தில் கேள்விக் குறியாக்கப் பட்டது.
2002 குஜராத் இனப்படுகொலையின் போது மொத்த மாநில நிர்வாகம் எவ்வாறு ஈடுபட்டது என்பது குறித்தும் குற்றவாளிகளின் ஒப்புதல் வாக்குமூலங்கள் தெஹல்கா ஒளிப்பதிவு கோர்வைகளாக வெளி வந்துள்ளன.
அதில் 'குஜராத் மாநில அரசு வழக்கறிஞர் அர்விந்த் பாண்டியாவின் வாக்குமூலத்தில் முஸ்லிம் இனப்படு கொலை நாள் ஒவ்வொரு ஆண்டும் வெற்றிநாளாக கொண்டாடப் படவேண்டும் என்றும் ஒவ்வொரு நீதிபதியும் தன்னை தங்களது சேம்பருக்கே அழைத்து எனக்கு முழு அபிமானத்தையம் ஆதரவையும் தெரிவித்ததோடு, முழு ஒத்துழைப்பையும் தேவையான நேரத்தில் தருவதாகவும் நீதிபதிகள் தெரிவித்திருக் கிறார்கள். ஏனெனில் அடிப்படையில் அவர்கள் ஹிந்துக்கள் என்றும் அவர் மதவெறிக் கொப்பளிக்க தெரிவித்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
என்னை சிறையிலிருந்து வெளியே எடுப்பதற்காக நரேந்திரமோடி எனக்காக மூன்று முறை நீதிபதிகளை மாற்றினார் என பாபு பஜ்ரங்கி என்பவர் தெரிவித்துள்ள ஒப்புதலையும், பாஜக எம்.எல்.ஏ ஒருவர் மோடி தங்களுக்கு மூன்று நாட்கள் வழங்கியதாகவும் நீங்கள் எந்த வன்முறை வேண்டுமானாலும் செய்து கொள்ள லாம் என்று அனுமதி அளித்ததையும் குடியரசுத் தலைவரும், உச்சநீதிமன்றமும், கவனத்தில் கொள்ள வேண்டும்.
நரேந்திரமோடியை உடனடியாக பதவி நீக்கம் செய்து குஜராத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.ய் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும். நடப்பு காலகட்டத்தில் குஜராத்தில் தேர்தல் நடத்த உகந்த சூழல் இல்லை.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் மேற்பார்வையின் கீழ் சிபிஐ விசாரணை மேற்கொண்டு பாரதீய ஜனதாவின் அரசியல் கட்சி ரத்து அங்கீகாரத்தை செய்ய தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெஹல்கா பதிவுகளில் கொலையாளிகள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் அனைத்துக் குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் மற்றும் சிவசேனா உள்ளிட்ட அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகள் என்று அறிவிக்க வேண்டும், தெஹல்கா ஒளிப்பதிவு ஆதாரங்களில், குற்றவாளிகள் தாங்கள் இத்தகைய அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் என்று பெருமையுடன் அறிவித்தார்கள். கொள்ளையடித்த திலும், குண்டுகள் உற்பத்தி செய்ததையும், ராக்கெட்டுகள் உற்பத்தி செய்ததையும் ஒப்புதல் வாக்குமூலமாக கூறியதன் அடிப்படையில் உச்சநீதி மன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ விசாரணை அமைக்கப் பட வேண்டும்.
நான்டெடில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற குண்டு வெடிப்புகள் குறித்து மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் பெரிய அளவில் சங் பரிவார் சக்திகள் வெடிகுண்டுகள் தயாரித்து பிரத்தியேக பயிற்சி எடுத்து அப்பாவிகளைக் கொன்றதை தெஹல்கா ஒளிப்படப் பதிவுகள் உறுதி படுத்தியுள்ளன. எனவே நாட்டில் நடைபெற்றுவந்துள்ள சங்பரிவார் சதிகள் குறித்து விசாரணை செய்ய வேண்டும் இப்போதே!