Wednesday, November 14, 2007

வாணியம்பாடி: பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏன்?


வாணியம்பாடி: பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏன்?
ஆய்வுக் கட்டுரை
வி.என். முகம்மது உசேன்

கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள முஸ்லிம்கள் சிங்கப்பூர், மலேசியா, பர்மா, சைகோன், சிலோன் என்று வெüநாடுகளுக்கு வேலை தேடிச் சென்ற போது, வடஆற்காடு என்று அழைக்கப் பட்டு வந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், பேர்ணாம்பட்டு மேல்விஷாரம் நகரங்கüல் வாழ்ந்த முஸ்லிம்கள், தோல் தொழிற்சாலைகளை நிறுவினர். இதனால், தொழில் முனைவோருக்கு வருவாய் வந்ததோடு மட்டுமல்லாமல், பல ஆயிரக்கணக்கான குடும்பங்களை வாழவைக்க வேலை வாய்ப்புகள் கிடைத்தன.

வாணியம்பாடியின் பொருளாதார வளர்ச்சியால் எவ்வளவு முன்னேற்றம் அடைந்தது என்பதற்கு சில உதாரணங் களைக் காணலாம். சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாணியம்பாடியில் உள்ள முஸ்லிம்கள் தொலை நோக்கோடு முஸ்லிம்கள் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இஸ்லாமியக் கல்வி அறக் கட்டளையை ஆரம்பித்தனர். அதன் வழியே ஓர் உயர்நிலைப் பளளியையும், மேல்படிப்பிற்காக இஸ்லாமியா கல்லூரியையும் ஆரம்பித்தனர். ராஜகிரியிலிருந்து ஒருவர் 75 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இஸ்லாமியாக் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்க வருபவருக்கும் இந்தக் கல்லூரி உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமல்ல, ஆம்பூர், திருப்பத்தூர் வாசிகளுக்கு மட்டுமல்ல, வெளிமாவட்ட, வெளி மாநில, சிறுபான்மையினருக்கு மேல்படிப்பு கற்க வாய்ப்பளித்தது.

வாணியம்பாடி முஸ்லிம்கள் வாழ் வாங்கு வாழ்ந்தனர் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு, பர்தா அணிந்த பெண்கள் பொழுதுபோக்கிற்காக இந்தியாவிலேயே பிரத்யேகமாக பெண்களுக்காக பூங்கா அமைத்தனர். தோல் தொழில் இங்கு எவ்வளவு செழிப்படைந்து இருந்தது என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், வாணியம்பாடி கச்சேரி ரோட்டில் டேனரி கட்டிய அதன் உரிமையாளர் தங்கத்தாலான பூட்டையும், சாவியையும் அதனைத் திறந்து வைத்த ஆங்கிலேய இறக்குமதியாளருக்கு அன்பüப்பாக அளித்தாரென்றால், வாணியம்பாடி எவ்வளவு பொருளாதார செழிப்பு அடைந்திருந்தது என்பது விளங்கும். முஸ்லிம்கள் நடத்தும் தோல் கடைகளில் பல இந்து மேலாளர்கள், லெதர் டெக்னிசியன்கள், தொழிலாளர்கள் சரளமாக உருது பேசுவது கண்டால் வியப்பாக இருக்கும்.

பொருளாதார வளர்ச்சியும், கல்வியறிவும் பெற்ற வாணியம்பாடி முஸ்லிம்கள் சமூக சீர்திருத்தத்திலும் முன்னேறியிருந்தனர். தென்மாவட்டங்கüல் சில இடங் கüல் வாழும் முஸ்லிம்கள் இந்தக் காலத்திலும் திருமணத்திற்காக அலங்கரிக்கப்பட்ட பந்தல்கள், தோரணங்கள், மின் விளக்கு கள், ஊர்வலங்கள், வாத்தியங்கள் என்று நடைபெறும்போது, 40 ஆண்டுகளுக்கு முன்னரே முஸ்லிம் திருமணங்கள் எளிமையா குறித்த நேரத்தில் பள்ளிவாசலில் நடைபெற்று வந்தன. பள்ளிவாசலில் நடைபெறும் திருமணத்திலும், பின்னர் மாப்பிள்ளை வீட்டில் நடைபெறும் சக விருந்திலும், பல இந்து நண்பர்கள் கலந்துகொள்வது இங்குள்ள சமூக ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும். வாணியம்பாடி என்றால் எப்படி தோல் தொழில் நினைவிற்கு வருகிறதோ அதைப் போன்று இங்கு தயார் செய்யப்படும் பிரியாணியும் பெயர் பெற்றதாகும். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கடைசி யாக இங்கு வந்தபோது பிரியாணியை சாப்பிட்டு விட்டு இது போன்ற சுவையான பிரியாணியை இதுவரை சாப்பிட்டதில்லை என்று கூறி அதனைத் தயார் செய்த சமையல்காரரை தன்னுடன் விமானத்தில் அழைத்துச் சென்று, அவர் இறக்கும் வரை அவரது வீட்டில் சமையல் செய்துவத்தாரென்றால் வாணியம்பாடியில் தயாராகும் பிரியாணியின் சிறப்பு விளங்கும்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள தோலாடை உற்பத்தியாகும் நகரங்களில் வெவ்வேறு தோல்கள் உற்பத்தி செய்யப் பட்டன. வாணியம்பாடியில் செம்மறி ஆட்டுத்தோலும், ஆம்பூரில் வெள்ளாட்டுத் தோலும், பேர்ணாம்பட்டில் மாட்டுத்தோலும், மேல்விஷாரம், ராணிப்பேட்டையில் கன்றுத் தோல்களும் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்ற நாடுகளிலும், வட இந்தியாவிலும் உள்ள ஆட்டுத் தோல் களை விட, மதுரை கசாயில் கிடைக்கும் செம்மறி ஆட்டுத் தோல் தான் உலகிலேயே கிடைக்கும் ஆட்டுத் தோல்கüல் மிகவும் சிறந்தவை. மதுரையும் அதன் சுற்று வட்டாரத்தில் கிடைக்கும் தோல் பதனிடப்பட்டு ஒப்பனை செய்தபின் மிகவும் மென்மையாக இருப்பதுடன், உறுதியாகவும் அழுத்தமாகவும் இருக்கும். பெண்கள் காலணி செய்வதற்கும், தோல் ஆடைகள் தயாரிக்கவும் மிகவும் சிறந்தவை.

கடந்த ஏழு ஆண்டுகளாக வெüநாட்டி லிருந்து தோல் ஆடைகளுக்கு வரும் ஆர்டர்கள் மிகவும் குறைந்து விட்டன. எனவே இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் தோல் ஆடைகள் குறைந்தன. பல தோலாடைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் டெல்லி, சென்னை போன்ற நகரங்களில் மூடப்பட்டு விட்டன. இந்த நிறுவனங்களு க்கு ஒப்பனை செய்யப்பட்ட தோல்களை சப்ளை செய்யும் வாணியம்பாடி தோல் கடைகள் மிகவும் பாதிக்கப்பட்டன. தினமும் 20லி25 லாரிகளில் வெளியூரிலிருந்து பச்சைத் தோல்கள் வாணியம்பாடிக்கு வரும். அது இன்று நான்கு, ஐந்து என்ற நிலைக்கு வந்துள்ளது. மற்ற மாநிலங்கüலும் தோல் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. வாணி யம்பாடியில் நிலைமை மோசமானதற்கு மற்றொரு காரணமாகும். கடந்த ஒரு வருடத்தில் அமெரிக்க டாலரின் மதிப்பு 45 ரூபாயிலிருந்து 39 ரூபாய்க்கு வீழ்ந்தது. பல நிறுவனங்கள் நஷ்டத்திற்குள்ளான. கடந்த ஏழு ஆண்டுகளில் வாணியம்பாடி யில் தோல் தொழில் தொடர்ந்து தொய்வு கொண்டதால் பல குடும்பங்கள் வாணியம் பாடியிலிருந்து மாற்றுத் தொழில் செய்யும் நோக்கோடு பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் என்று குடிபெயர்ந்தன.

உலகளவில் தோல் ஆடைகளுக்கான தேவைப்பாடு பல காரணங்களால் குறைந்து விட்டது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகüல் உள்ள நுகர்வோர் ஒரு காலத்தில் ஒரு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தோலாடைகள் வாங்வர். தற்போது அவர்கள் இரண்டு, மூன்று வருடங்களுக்கு ஒன்று வாங்கினால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது. தோலாடைகளை நவீன முறையில் டிரைகிளினீங் செய்வதும் இதற்கு உதவியது. தோல் அல்லாத சிந்தடிக் பொருள்களால் ஆடைகள் செய்து குறைந்த விலையில் வெüநாட்டு சந்தைகளில் விற்கப்படுகின்றன. வாணியம் பாடி தோல் தொழிற்சாலைகள் தொய்வு அடைந்ததற்கு சீனாவும் ஒரு காரணம். மிகக் குறைந்த விலையில் தோலாடைகள் உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்து, இந்தியாவை பல சந்தைகளிலிருந்தும் விரட்டியடித்து விட்டது சீனா.

வாணியம்பாடியில் உள்ள தோல் தொழிற்சாலைகள் காலப்போக்கில் எண்ணிக்கையில் பெருகினவே ஒழிய, 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலை களைப் போல் செங்குத்தாக வளரவில்லை. ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலைகள் கடந்த முப்பது ஆண்டுகளில் தோல் உற்பத்தியுடன், தோல் காலணி உற்பத்தி யிலும் ஈடுபட்டு இன்று இந்தியாவில் மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசியாவிலேயே தோல் காலணி உற்பத்தி செய்யும் மையங் கüல் மிக முக்கியமான நகரமாகியது. மிகுதமானவை முஸ்லிம்களால் நடத்தப் படும், 50க்கும் மேற்பட்ட தோல் காலணி தொழிற் சாலைகள், ஒரு லட்சம் பேருக்கு மேலான ஆண், பெண்களுக்கு வேலை வாய்ப்பளித்து பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணி ஈட்டி வருகிறது.
கடந்த ஒரு வருடமாக வாணியம்பாடி தோல் தொழிற்சாலைகள், தோலாடை களுக்கான தோலை தவிர்த்து, தோல் காலணிக்கான தோலை உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சில சிறியதாக காலணி தொழிற்சாலைகளும் வருகின்றன. இவைகள் பெருகி பெரிய தொழிற்சாலைகளாக மாறினால், வாணியம் பாடி திரும்பவும் பொருளாதார முன்னேற்றப் பாதையில் செல்ல வாய்ப்புள்ளது.

வாணியம்பாடியைச் சுற்றிலும் உள்ள மலையடிவாழ் கிராமங்கüல் காய்கள், கனிகள், பூக்கள் நிறைவாக விளைகின்றன. இவைகüன் ஏற்றுமதி இந்தியாவிலிருந்து அதிகரித்து வருகின்றது. வாணியம்பாடி யில் உள்ள முனைவர்கள் இந்தப் புதிய தொழில்கüல் முயற்சி செய்தால் பொருளாதார வளாச்சிக்கு மிகவும் உதவும். இந்த தோல் தொழிலில் சிறுபான்மையினர் அதிகமாக ஈடுபட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகமாக கிடைத்துள்ளன. தமிழகத்தில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த இந்தத் தொழில் கடந்த காலங்கüல் தொய்வு கண்டுள்ளது. ஒரு கமிட்டி அமைத்து இந்தத் தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து சரிசெய்வது மாநில அரசின் பொறுப்பாகும்.

தோல் தொழிற்சாலைகüலிருந்து வெüயாகும் கழிவு நீரை சுத்தப்படுத்துவது வெளியில் விடுவதால் பெரும்செலவு ஏற்படுகிறது. இதில் கணிசமான தொகையை மத்திய மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டால், வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கும் இந்தத் தொழில் வளர்வதற்கு மிகவும் உதவும். இங்குள்ள அரசாங்க மருத்துவமனையை மேம்படுத்துதல், கச்சேரி ரோட்டிற்கும், வளையம்பேட்டிற்கும் நடுவில் கால்வாயில் உள்ள பாலம் இடிந்து ஐந்து ஆறு ஆண்டுகள் ஆகின்றன. செப்பனிட இங்குள்ள தமுமுகவினர் முயற்சி செய்தால் அவர்கள் ஏற்கெனவே செய்துவரும் தொண்டிற்கு மற்றுமொரு முத்தாய்ப்பாக அமையும்.

No comments: